டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி மனு: சிபிஎஸ்இ பதிலளிக்க நோட்டீஸ்

பாரபட்சமாக நடைபெற்ற நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2017, 9:54 pm

DIN

பாரபட்சமாக நடைபெற்ற நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி, அண்ணாநகரைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் முகமது சார்பில் அவரது தாயார் தாக்கல் செய்த மனு விவரம்: மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) கடந்த 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தியது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட முக்கிய மொழிகளில் தேர்வுக்கான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்தத் தேர்வில் பங்கேற்ற எனது மகன் ஆங்கில வழியில் தேர்வு எழுதினார். தமிழகத்தில் பல மாணவர்கள் தமிழ் மொழியில் "நீட்' தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் மாணவர்களின் திறமையைப் பரிசோதிக்க ஒரே விதமான தேர்வு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
ஏன் இந்த பாரபட்சம்? ஆங்கிலத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கும் ஒரே விதமான கேள்விகள் கேட்கப்படவில்லை. உதாரணமாக, பேருந்துக்கான என்ஜின் எவ்வாறு செயல்படுகிறது என ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கேள்விக் கேட்கப்பட்டது. ஆனால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஒரு பேருந்தில் எத்தனை சக்கரங்கள் உள்ளன என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மாநில பாட திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கை பாரபட்சமானது.
மற்ற மாநிலங்களில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வி, அப்படியே அந்த மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்து கேட்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு நடைமுறை, தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை.
"நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எனவே, கடந்த 7-ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, நாடு முழுவதும் ஆங்கிலம் உள்பட பிற மொழிகளிலும் ஒரே விதமான கேள்விகளுடன் கொண்ட கேள்வித் தாள்களைத் தயாரித்து மீண்டும் தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த மனுவுக்கு வரும் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க, சி.பி.எஸ்.இ. இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.