பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொடரும் மின் விபத்துகள்: உரிய தீர்வு காணப்படுமா?: உயரம் அதிகரிக்கப்பட வேண்டிய மின் பெட்டிகள்

மழைக் காலங்களில் தொடர்கதையாகி வரும் மின் விபத்துகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள், மின் வாரிய ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 11:06 pm

DIN

மழைக் காலங்களில் தொடர்கதையாகி வரும் மின் விபத்துகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள், மின் வாரிய ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து இரு சிறுமிகள் இறந்த சம்பவத்தையடுத்து மின்வாரிய நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. மின் ஊழியர்கள் சங்க மத்தியச் சென்னை தலைவர் ஸ்ரீநிவாசன் கூறியது:
கடந்த 2015 -இல் பெரு வெள்ள பாதிப்பின்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்னை முழுவதும் 2 ஆயிரம் பில்லர் பெட்டிகள் சாலையோரங்களில் மிகவும் தாழ்வாக இருப்பது கண்டறியப்பட்டது. இவை அனைத்தும், சென்னையின் குடிசைப் பகுதிகள் மற்றும் வடசென்னைப் பகுதிகளிலேயே அமைந்திருந்தன. இவற்றை நிலமட்டத்திலிருந்து 3 அடி உயரம் உயர்த்துவதற்கு 2016- இல் நிதி ஒதுக்கப்பட்டது. 80 சதவீதப் பணிகள் இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் பருவ மழையை சென்னை சந்திக்கிறது.
ஊழியர் பற்றாக்குறை, குறிப்பாக கீழ்நிலை ஊழியர்கள் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாகவே பணிகள் தேங்கியுள்ளன.
20 ஆயிரம் காலியிடங்கள்: மின் வாரிய விதிகளின்படி, ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் ஓர் உதவிப் பொறியாளருக்கு (ஏ.இ.) 7 வயர்மேன்கள், 7 உதவியாளர்கள் இருக்க வேண்டும். இவர்கள் சாலையில் பள்ளம் தோண்டுவது, புதைவடங்களைச் சரி செய்வது உள்ளிட்ட தொடர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வர். 
ஆனால், சராசரியாக ஒவ்வொரு பகுதியிலும் 3 வயர் மேன்கள், 3 உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கீழ்நிலைப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. 
மின் பெட்டிகள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் கையிருப்பில் இல்லை. கொள்முதல் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்ட பின்னரும், 6 மாதமாக புதிய பில்லர் பெட்டிகள் மின் வாரியத்துக்கு வரவில்லை என்றார்.
தீர்வு என்ன? மின் விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு காண ஊழியர்கள், உதிரி பாகங்கள் முழு அளவில் இருப்பதை மின்வாரியம் உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் மின்கம்பங்களின் மின்கம்பிகளும், மின் வாரிய மின்கம்பிகளும் அருகருகே பூமியில் புதைக்கப்படுகின்றன. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும்போது, மின் வாரியக கம்பிகள் சேதப்படுத்தப்படுகின்றன. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றனர் மின்வாரிய ஊழியர்கள்.
இதுகு றித்து பெயர் குறிப்பிட விரும்பாத மின் வாரிய உயர் அதிகாரி கூறியது: சென்னை கொடுங்கையூர் மின் விபத்தைத் தொடர்ந்து, தலைமை மின் பொறியாளர் (சி.இ.) தலைமையில் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இக்குழுக்கள் சென்னை முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, தாழ்வாக உள்ள மின் பெட்டிகள், சேதமடைந்துள்ள மின்கம்பிகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வர். 
இக்குழு அறிக்கை சமர்ப்பித்ததும், அதனடிப்படையில், மின் விபத்துகள் இனி நடைபெறாத வகையில் பராமரிப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றார்.
11 கீழ்நிலை ஊழியர் பற்றாக்குறை
மின் விபத்தில் இரு சிறுமிகளைப் பலி கொண்ட சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதிக்கான மின் வாரிய பகுதி அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியர் பணியிடங்கள் 14-இல் 11 இடங்கள் காலியாக உள்ளன. அத்துடன் 7 வயர் மேன்கள், 4 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளுக்குக் கையூட்டு?
மின் வாரியத்தில் உதிரி பாகங்கள் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கும் நிலையில், ஒவ்வொரு பகுதி அலுவலக மின்வாரிய ஊழியர்களும், மின்வாரிய சேமிப்பு அறையில் (ஸ்டோர் ரூம்) இருந்து பராமரிப்புப் பணிக்காக உதிரி பாகங்களைப் பெற, அங்குள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கவேண்டியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மின் ஊழியர்கள் சங்கத் தலைவர் (சிஐடியு) ஸ்ரீநிவாசன் கூறியதாவது: பகுதி அலுவலகங்களுக்கு மின் வாரியம் சார்பில் உதிரி பாகங்களைக் கொடுப்பதே இல்லை. போதிய நிதியும் வழங்குவதில்லை. இதனால், அந்தந்தப் பகுதி உதவிப் பொறியாளர்கள் சொந்தமாக உதிரி பாகங்களை வாங்கி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது.
அதையும் மீறி, மின்வாரிய சேமிப்புக் கிடங்கில் இருந்து உதிரி பாகங்களைப் பெற வேண்டுமெனில், அங்குள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.