ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

சென்னை திருவேற்காட்டில் தாய், மூன்று குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவேற்காடு அருகே உள்ள மேல்அயனப்பாக்கம் எட்டீஸ்வரன்

Updated On :9 ஏப்ரல் 2018, 10:47 pm

சென்னை திருவேற்காட்டில் தாய், மூன்று குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவேற்காடு அருகே உள்ள மேல்அயனப்பாக்கம் எட்டீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவருக்கு இந்து (9), லட்சுமி (8) என்ற 2 மகள்களும், சந்தோஷ் (6) என்ற மகனும் உள்ளனர். சுப்புலட்சுமி கணவரைப் பிரிந்து சகோதரனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் திங்கள்கிழமை சுப்புலட்சுமி திடீரென விஷத்தை தண்ணீரில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதில் 4 பேரும் மயங்கி விழுந்தனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.