சென்னையில் இறந்த தாயின் உடலை அடக்கம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சோக சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உத்தமபாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (85) மகன் கண்ணன் (52). இவர் மனைவி சாந்தி. இவர்களின் மகன்கள் அருண்குமார், அஜித்குமார், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
கண்ணன் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். சென்னை விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் வாடகைக்கு கண்ணன் வசித்து வந்தார். அருண்குமார் அண்மையில் வீட்டை விட்டு பிரிந்து, தனது காதலியுடன் சென்றுவிட்டார்.
இதன் பின்னர் அவர், குடும்பத்துடன் தொடர்பில் இல்லை. இதனால் அருண்குமாரின் வருமானத்தை நம்பியிருந்த கண்ணனின் குடும்பம் தள்ளாடியது. வறுமையில் சிக்கிய கண்ணனால் இரு மாதங்களாக வாடகையும் கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில், புவனேஸ்வரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது பற்றி கண்ணன், உத்தமபாளையத்தில் உள்ள தனது உறவினர்களுக்குத் தெரிவித்தும், அவர்கள் யாரும் பார்க்க வரவில்லை.
இதற்கிடையே புவனேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார். தாய் இறந்த தகவல் தெரிந்தால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மேலும் நெருக்கடி கொடுப்பார்கள், வீட்டை காலி செய்யச் சொல்வார்கள் என கண்ணன் நினைத்தார். கண்ணன் குடும்பத்தினர் புவனேஸ்வரி இறந்த துக்கத்தை கூட வறுமையால் வெளியே காட்ட முடியாமல் இருந்தனர்.
மோட்டார் சைக்கிளில்... யாருக்கும் தெரியாமல் தாயின் சடலத்தை அடக்கம் செய்ய கண்ணன் முடிவு செய்தார். அதன்படி, திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு புவனேஸ்வரியின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் படுக்க வைத்து, விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்துக்கு கண்ணன் தள்ளிச்சென்றார். சடலம் கீழே விழாமல் இருப்பதற்காக, அவர் மனைவி சாந்தி உடன் சென்றார்.
அப்போது, நடைப்பயிற்சியில் ஈடுபட்ட சிலர், மோட்டார் சைக்கிளில் கண்ணன் சடலத்தை எடுத்துச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
மின்மயானம் அருகே போலீஸார், கண்ணனை பிடித்து விசாரித்தனர். தாய் இறந்தது, வறுமை, உறவினர் கைவிட்டது ஆகிய காரணங்களால் மோட்டார் சைக்கிளில் தனது தாயார் சடலத்தை மயானத்துக்குக் கொண்டு வந்ததாக போலீஸாரிடம் கூறினாராம். போலீஸார் புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் வேதனை: பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், சொந்த ஊருக்கு புவனேஸ்வரியின் சடலத்தை எடுத்துச் செல்ல போலீஸார் தெரிவித்தனர். ஆனால், அங்கு செல்ல முடியாது என்று கண்ணன் கூறினார்.
இதையடுத்து, உத்தமபாளையத்தில் உள்ள உறவினர்களிடம் போலீஸார் பேசினர். அப்போது அவர்கள் சொந்த ஊருக்கு புவனேஸ்வரி சடலத்தை கொண்டு வருமாறும், தாங்கள் அடக்கம் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, திங்கள்கிழமை மாலையில் புவனேஸ்வரியின் சடலத்தை சொந்த ஊருக்கு அரசின் இறுதி ஊர்வல வாகனத்தில் கண்ணன் குடும்பத்தினர் எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும்,வேதனையையும் ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

