8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அண்ணா நூற்றாண்டு நூலகம்: பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் நாளை சிறப்புரை

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள "பொன்மாலைப் பொழுது' நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


சென்னை:  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள "பொன்மாலைப் பொழுது' நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள்,  தமிழ் ஆர்வலர்களுக்காக வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொன் மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 
இதில் பிரபல இலக்கிய ஆளுமைகள்,   பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று சொற்பொழிவாற்றி வருகின்றனர். 
இந்த வாரத்துக்கான பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பங்கேற்று, "அரங்கேறும் சொற்கள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றவுள்ளார்.  
இந்த நிகழ்ச்சி "யு டியூப்', "முகநூல்' ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது; 'Anna Centenary 
Library' என்ற தேடலில் நேரலை ஒளிபரப்பை காணலாம். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இலவசம் என்றும் நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.