குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

70 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகப் பை

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட விலையில்லா பொருள்கள்  டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என 

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சென்னை:  அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட விலையில்லா பொருள்கள்  டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்  ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு புத்தகப்பை,  காலணி,  கிரையான்கள்,  வண்ணப் பென்சில்கள் உள்ளிட்ட 9 விலையில்லாப் பொருள்கள் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.  
  கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பொருள்கள் கல்வியாண்டின் இறுதிக் கட்டத்தில் வழங்கப்பட்டு வந்தன.  இதனால் அந்தப் பொருள்களை கல்வியாண்டில் தொடக்கத்திலோ அல்லது இடைப்பட்ட காலத்திலோ வழங்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.  இதைத் தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் முதலே தொடங்கி நடைபெற்று வருகின்றன. 
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,  விலையில்லா பொருள்களை வழங்குவதற்காக  பல கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.   கடும் தர ஆய்வுகளுக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருள்களை கொள்முதல் செய்ய முடியும்.  தற்போதைய சூழலில் 60 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டன.  இதைத் தொடர்ந்து 1, 2 வகுப்புகளில் படிக்கும் 9 லட்சம் மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் கிரையான் பென்சில்களும்,  ஒன்றுமுதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 56 லட்சம் மாணவர்களுக்கு காலணிகளும்,  ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப்பையும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என்றனர்.  அதே போன்று மலைப் பகுதிகளில் பயன்படுத்தும் பிரத்யேக காலணிகள்,  ஜியோமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருள்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.