
சொத்து வரி சீராய்வு சுய மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போர் சொத்து வரி சீராய்வு சுய மதிப்பீட்டு அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 31) தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போர் சொத்து வரி சீராய்வு சுய மதிப்பீட்டு அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 31) தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களும், தங்களது சொத்து தொடர்பாக சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 31) தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான படிவங்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும் சொத்து விவர அறிக்கை படிவத்தை பதிவிறக்கம் செய்து மேற்கண்ட அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளத்திலும் பதிவேற்றம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
3 லட்சம் பேர் தாக்கல்: வியாழக்கிழமை வரை 8 லட்சத்து 35 ஆயிரத்து 955 பேர் சொத்து வரி சீராய்வு தொடர்பான சுய மதிப்பீட்டு விவர படிவங்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 29 ஆயிரத்து111 பேர் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். இணையதளம் மூலமாக மட்டும் 74 ,947 பேர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இன்றே கடைசி: சொத்துவரி விவர அறிக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும். இதையொட்டி, மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலகங்கள் இரவு 10 மணி வரை இயங்கும். 24 மணி நேரமும் இணையதள சேவை செயல்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு..: வருவாய் அலுவலரை 94451 90742 என்ற எண்ணிலும், தலைமையிடத்து உதவி வருவாய் அலுவலரை 94448 17161, மண்டலம் 1-க்கு உள்பட்டவர்கள் 94451 90081, மண்டலம் 2-க்கு உள்பட்டவர்கள் 94451 90082, மண்டலம் 3-க்கு உள்பட்டவர்கள் 94451 90083, மண்டலம் 4-க்கு உள்பட்டவர்கள் 94451 90084, மண்டலம் 5-க்கு உள்பட்டவர்கள் 94451 90085, மண்டலம் 6-க்கு உள்பட்டவர்கள் 94451 90086, மண்டலம் 7-க்கு உள்பட்டவர்கள் 94451 90087, மண்டலம் 8-க்கு உள்பட்டவர்கள் 94451 90088, மண்டலம் 9-க்கு உள்பட்டவர்கள் 94451 90089, மண்டலம் 10-க்கு உள்பட்டவர்கள் 94451 90090, மண்டலம் 11-க்கு உள்பட்டவர்கள் 94451 90091, மண்டலம் 12-க்கு உள்பட்டவர்கள் 94451 90092, மண்டலம் 13-க்கு உள்பட்டவர்கள் 94451 90093, மண்டலம் 14-க்கு உள்பட்டவர்கள் 94451 90094, மண்டலம் 15-க்கு உள்பட்டவர்கள் 94451 90095 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்
இதுகுறித்து நங்கநல்லூரைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு சங்க பொதுச் செயலர் வி.ராமா ராவ் கூறுகையில், " சொத்து வரி சீராய்வு சுய மதிப்பீட்டு அறிக்கை குறித்து பெரும்பாலான மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. சொத்து மதிப்பீட்டு படிவங்களைப் பெறுவதிலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பித்தலிலும், வயது முதிர்ந்தோர், வெளியூர்களில் வசிக்கும் சொத்து உரிமையாளர்கள் உடனடியாக சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, அக்டோபர் மாதம் வரை சொத்து வரி சீராய்வுப் படிவத்தை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





