அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தீபாவை ஏமாற்ற நடந்த நாடகம்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டுக்கு, போலி வருமான வரித்துறை அதிகாரி வந்தது,

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:59 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டுக்கு, போலி வருமான வரித்துறை அதிகாரி வந்தது, அவரை ஏமாற்றுவதற்காக நடந்த நாடகம் என்பது போலீஸாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலி வருமான வரித்துறை அதிகாரியாக தீபா வீட்டுக்கு சோதனையிட வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், தீபாவின் கணவர் மாதவன் ஏற்பாட்டின் பேரிலேயே அவர் வந்தது தெரியவந்துள்ளது. 
தீபாவை ஏமாற்றி அவர் வீட்டில் இருந்த பணத்தையும், பொருள்களையும் அபகரிக்கவே இந்த நாடகம் நடத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸார் மாதவனை தேடி வருகின்றனர். அதேவேளையில் இந்த நாடகத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது எனவும் போலீஸார் விசாரணை செய்கின்றனர்.எம்.பி.ஏ. படித்துள்ள பிரபாகரனை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி, ஏமாற்றி மாதவன் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க வைத்திருப்பது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
இதில் மாதவன், தான் சிக்காமல் இருப்பதற்கு பிரபாகரனிடம் செல்லிடப்பேசி மூலம் தொடர்புக் கொள்ளும்போது வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்புக் கொண்டுள்ளதும், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தான் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக பிரபாகரனுக்கு அனுப்பிய கூரியர் கூட மற்றொருவர் முகவரியில் இருந்து அனுப்பியிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.