இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

விழுப்புரத்தில் பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

விழுப்புரத்தில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 3:11 am IST

விழுப்புரத்தில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாற்றம் செய்யப்படும் ரயில்கள்:
சென்னை எழும்பூர்-புதுச்சேரிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (56037) திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர்-திண்டிவனம் இடையே மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி-எழும்பூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (56038) பகுதி ரத்து செய்யப்பட்டு திண்டிவனம்-எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருப்பதி-புதுச்சேரி (56041), புதுச்சேரி-திருப்பதி (56042) பயணிகள் ரயில்கள் திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில்கள் திருப்பதி-திண்டிவனம் இடையே மட்டும் இயக்கப்படும்.
மேல்மருவத்தூர்-விழுப்புரம் (66045), விழுப்புரம்-மேல்மருவத்தூர் (66046) பயணிகள் ரயில்கள் முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில்கள் மேல்மருவத்தூர்-முண்டியம்பாக்கம் இடையே மட்டும் இயக்கப்படும்.
நேரம் மாற்றம்: சென்னை எழும்பூர்-மதுரை செல்லும் 
வைகை விரைவு ரயில் மதியம் 1.40 மணிக்கு பதில் 2 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் பிற்பகல் 3.45 மணிக்கு பதில் 30 நிமிடம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
25-இல் மாற்றம் செய்யப்படும் ரயில்: விழுப்புரம்-புதுச்சேரி (56863), புதுச்சேரி-விழுப்புரம் (56864) பயணிகள் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
ஜூலை 26, 27 தேதிகளில் மாற்றம் செய்யப்படும் ரயில்கள்:
சென்னை எழும்பூர்-புதுச்சேரி (56037), புதுச்சேரி-சென்னை எழும்பூருக்கு (56038) இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் சென்னை எழும்பூர்-திண்டிவனம் இடையே மட்டும் இயக்கப்படும். 
திருப்பதி-புதுச்சேரி (56041), புதுச்சேரி-திருப்பதிக்கு (56042) இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில்கள் திருப்பதி-திண்டிவனம் இடையே மட்டும் இயக்கப்படும்.
மேல்மருவத்தூர்-விழுப்புரம் (66045), விழுப்புரம்-மேல்மருவத்தூர் (66046) ரயில்கள் முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் மேல்மருவத்தூர்-முண்டியம்பாக்கம் இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.