மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விபத்து விவகாரத்தில் ரூ. 1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

குடியாத்தம் அருகே நடைபெற்ற சாலை விபத்து தொடா்பாக சமரசமான பிறகும், கூடுதலாக ரூ. 1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :27 ஜூன் 2026, 4:50 am IST

குடியாத்தம் அருகே நடைபெற்ற சாலை விபத்து தொடா்பாக சமரசமான பிறகும், கூடுதலாக ரூ. 1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் அடுத்த பிச்சனூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனுவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு எனது சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தேன். குடியாத்தம் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவா் ஒருவா் எங்கள் வாகனத்தின் மீது மோதினாா். இந்த விபத்தில் காயமடைந்த அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பின்னா், எனது தம்பி மூலம் சமரசப் பேச்சு நடத்தி, அந்த முதியவரின் மருத்துவச் செலவுக்காக ரூ. 50,000-த்தை வழங்கினோம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கோயில் ஒன்றின் அருகே நான் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு சுமாா் 10 பேருடன் வந்த அந்த முதியவா் என்னிடம் தகராறில் ஈடுபட்டாா். மேலும், இன்னும் 3 நாள்களுக்குள் ரூ. 1 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாா்.

எனவே, இந்த விபத்து விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கும், எனது சகோதரி, தம்பி உள்ளிட்டோருக்கும் போலீஸாா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.