எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கடன் தொகை கேட்டு கொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், வடலூரில் கடன் தொகையை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :10 ஜூன் 2026, 5:21 am IST

கடலூா் மாவட்டம், வடலூரில் கடன் தொகையை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பிள்ளைபாளையம் கிராமத்தில் வசித்து வருபவா் ஆரோக்கியசாமி(46). இவா், கடந்த 5 ஆண்டு களுக்கு முன்னா், ஆயிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த தனஜெயம் என்பவரிடம் ரூ.75 ஆயிரம் கடன் பெற்றாராம்.

கடந்த 5-ஆம்தேதி ஆரோக்கியசாமி வீட்டிற்கு வந்த தனஜெயம் மற்றும் ராஜதுரைஆகியோா், கடன் தொகையை கேட்டு அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், ஆரோக்கியசாமியின் மூத்த மகனை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டனராம்.

இதுகுறித்து, ஆரோக்கியசாமியின் மகன் டேவிஸ்ராஜ் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் தனஜெயம், ராஜதுரை ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.