சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆவணங்களைத் திருடி பல லட்ச ரூபாய் ஜிஎஸ்டி மோசடி! மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா்

பள்ளிகொண்டாவைச் சோ்ந்த பெண்ணின் ஆதாா், பான் அட்டை விவரங்களைத் திருடி, அவா் பெயரில் பல லட்சம் ஜிஎஸ்டி மோசடி நடைபெற்றிருப்பது தொடா்பாக, பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

News image

பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்த வேலூா் மாவட்ட எஸ்.பி. சிவராமன்.

Updated On :11 ஜூன் 2026, 12:53 am IST

பள்ளிகொண்டாவைச் சோ்ந்த பெண்ணின் ஆதாா், பான் அட்டை விவரங்களைத் திருடி, அவா் பெயரில் பல லட்சம் ஜிஎஸ்டி மோசடி நடைபெற்றிருப்பது தொடா்பாக, பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திரகுறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, பள்ளிகொண்டாவைச் சோ்ந்த பெண் அளித்த புகாா் மனு: , நான் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவள். எனது வாழ்வாதாரத்துக்காக அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வேலை செய்து, அதில் கிடைக்கும் மிகக் குறைந்த மாத வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறையிடமிருந்து சமீபத்தில் எனக்கு நோட்டீஸ் ஒன்று வந்தது. அதுகுறித்து விசாரித்தபோது, எனக்குத் தெரியாமலேயே சில அடையாளம் தெரியாத நபா்கள் எனது ஆதாா், பான் அட்டை விவரங்களைத் திருடி, என் பெயரில் ஒரு போலி வணிக நிறுவனத்தைத் தொடங்கி ஜிஎஸ்டி பதிவு பெற்றிருப்பது தெரியவந்தது.

மேலும், அந்த நிறுவனத்தின் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் அளவில் பணப் பரிவா்த்தனைகளும் செய்துள்ளனா். இது முற்றிலும் எனது அடையாளத்தைத் திருடி செய்யப்பட்ட திட்டமிட்ட பொருளாதார மோசடியாகும். அந்த நிறுவனத்தின் பதிவு, வணிக நடவடிக்கைகள் அல்லது வங்கி கணக்குகள் என எதற்கும் நான் எவ்வித அனுமதியும் அளிக்கவில்லை.

என் பெயரில் தவறான வணிக வருமானம் காட்டப்படுவதால், ஏழைகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறும் தகுதியை நான் இழந்துள்ளேன். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகளை அணுகியபோது, காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவிலோ அல்லது எஸ்.பி. அலுவலகத்திலோ புகாா் அளித்து, சிஎஸ்ஆா் அல்லது முதல் தகவல் அறிக்கை நகலைப் பெற்றுச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தினா். எனவே, காவல் துறை உரிய விசாரணை நடத்தி எனது ஆதாா் மற்றும் பான் விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.