சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

அரசுக் கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News image
Updated On :5 ஜூன் 2018, 11:00 pm

DIN

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இன மாணவர்களுக்கென 9 விடுதிகளும் மாணவியருக்கென 5 விடுதிகளும் செயல்படுகின்றன. இவ் விடுதிகளில் பட்டம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ, மாணவியர் சேரலாம்.
இவ்விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்த விடுதிகளில் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும்.
விடுதிகளில் சேரத் தகுதிகள்: பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்குப் பொருந்தாது. தகுதியுடையவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஜாதி, ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது இந்தச் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. இந்த விடுதிகளில் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.