சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

திருக்கோயில் பணியாளர் போராட்டம் வாபஸ்

திருக்கோயில் பணியாளர்கள் புதன்கிழமை தொடங்குவதாக அறிவித்திருந்த உள்ளிருப்புப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Updated On :27 ஜூன் 2018, 4:22 am IST

திருக்கோயில் பணியாளர்கள் புதன்கிழமை தொடங்குவதாக அறிவித்திருந்த உள்ளிருப்புப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
திருக்கோயில் பணியாளர்கள் ஊக்க ஊதிய உயர்வு, ரொக்கப் பரிசு, ஓய்வூதியம் உயர்த்துதல், குடும்ப நல நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27-ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு திருக்கோயில் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் திருக்கோயில் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும், 7-ஆவது ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.