மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

காயிதே மில்லத் அரசு கல்லூரியில் விண்ணப்பம் பெற குவிந்த மாணவிகள்

சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நிகழாண்டில் (2018-19) மாணவிகளைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நிகழாண்டில் (2018-19) மாணவிகளைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
இந்தக் கல்லூரியில் சேருவதற்கு முதல் நாளிலேயே மொத்தம் 1,533 மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
காலை 10.30 மணி முதலே...: விண்ணப்ப விநியோகம் தொடங்கிய காலை 10.30 மணிக்கே நீண்ட வரிசையில் மாணவிகள் காத்திருந்து விண்ணப்பத்தைப் பெறத் தொடங்கினர்; அறிவித்தபடி பிற்பகல் 2.30 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. காலை முதல் தொடர்ந்து வரிசையில் காத்திருந்த மாணவிகள், பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு விண்ணப்பம் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மாத இறுதி வரை விண்ணப்பம்: காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இந்த மாத இறுதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும். மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்லூரி நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி: சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்தக் கல்லூரிகளில் நாள்தோறும் விண்ணப்பத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
தனிக் குழு மூலம்...: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரையில் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கென தனிக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலமாக சேர்க்கைப் பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், இதுவரை விண்ணப்ப விநியோகம் தொடங்காத அரசு கலைக் கல்லூரிகளில் விரைவில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று கல்லூரிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எத்திராஜ் மகளிர் கல்லூரி, புதுக் கல்லூரி: சென்னையில் உள்ள தனியார் கலைக் கல்லூரிகளைப் பொருத்தவரை ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்ய வேண்டும் என ஏற்கெனவே அறிவித்துள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு சில நாள்கள் முன்போ அல்லது தேர்வு முடிவு வெளியான நாள் முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்றும் தனியார் கலைக் கல்லூரிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.