சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுப் பிரிவு டிஜிபி-க்கு, ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயசந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
சென்னை, துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (21). திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக அந்தோணிராஜ் உள்ளிட்ட மூவரை நீலாங்கரை போலீஸார் கடந்த வியாழக்கிழமை (மே 17) அழைத்துச் சென்றனர். இந்நிலையில், அந்தோணிராஜ் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால் தான் அந்தோணிராஜ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
தானாக முன்வந்து வழக்கு: இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி. ஜெயசந்திரன் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி, ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு டிஜிபி-க்கு நீதிபதி டி.ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

