சென்னை சி.ஐ.டி. நகரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தார்.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் மெக்கானிக் அசோக்குமார் (18). இவர் புதன்கிழமை இரவு சிஐடி நகர் அருகே அண்ணா சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் தொடர்ந்து வந்த லாரி திடீரென மோதியது. இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
முதியவர் சாவு: சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையில் புதன்கிழமை இரவு 65 வயது மதிக்கதக்க ஒரு முதியவர் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சிமெண்ட் கலவை லாரி, முதியவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார்.
அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த லாரி ஓட்டுநர் வானகரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணனை (41) கைது செய்தனர். இறந்த முதியவர் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் நாங்கள் தொடர்பில் இல்லை! சிஜேபி

ஹார்ட் பீட் - 3 தொடரில் இணைந்த பிரபலம்! யார் இவர்?
அரசுப் பள்ளி சுற்றுச்சுவரில் 'ஜன நாயகன்' பட போஸ்டர்! வலுக்கும் எதிர்ப்பு!






