FOLLOW US

ON GOOGLE DISCOVER

மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கர்நாடக குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு முட்டுக் கட்டை போடக் கூடாது: கன்னட அமைப்பு

கர்நாடக குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு முட்டுக் கட்டை போடக் கூடாது என மஞ்சுநாத் தேவ் பேசியுள்ளது பற்றி...

News image

போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர். - படம் - தினமணி

Updated On :26 ஜூலை 2026, 2:34 pm IST

கர்நாடக குடிநீர் பிரச்னைக்கு தமிழக அரசு முட்டுக் கட்டை போடக் கூடாது என மஞ்சுநாத் தேவ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) பேசியுள்ளார்.

மேக்கேதாட்டு அணை திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு மற்று அமைப்புகளை கண்டித்தும் கன்னட ஜாகுருதி வேதிகே மாநிலத் தலைவர் மஞ்சுநாத் தேவ் தலைமையில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.

இது தொடர்பாக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் இன்று பெங்களூரில் காலிக்குடங்களுடன் பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மஞ்சுநாத் தேவ் பேசியதாவது.

​குடிநீர் திட்டத்துக்கு தமிழகம் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.​"மேக்கேதாட்டு அணைத் திட்டம் என்பது விவசாயத்துக்கான திட்டம் அல்ல; அது பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டம். இத்திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

​ஏற்கெனவே, போதிய பருவமழை இல்லாததால் கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட கர்நாடகத்தின் முக்கிய அணைகளில் தண்ணீர் இல்லை. இத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வற்புறுத்துவது கன்னட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையைத் தடுக்க வேண்டாம் என கன்னட அமைப்பினர் வலியுறுத்துகிறோம்.

போராட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

குடிநீர் தட்டுப்பாடு:

கடந்த இரண்டு தசாப்தங்களாகவே பெங்களூரு நகரம் மற்றும் ராமநகரா மாவட்டங்கள் குடிநீர் தேவைக்காகப் போராடி வருகின்றன. பருவமழை பொய்த்துள்ள தற்போதைய சூழலில் காவிரியின் 4 முக்கிய அணைகளும் வறண்டு காணப்படுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஒகேனக்கல் திட்ட ஒப்பீடு:

கடந்த காலங்களில் தமிழக அரசு ஒகேனக்கல்லில் ஜப்பான் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய போது, கர்நாடக எல்லைப் பகுதி என்ற விவாதங்கள் இருந்தபோதிலும் குடிநீர் தேவைக்காக அது அனுமதிக்கப்பட்டது. அதேபோல், தற்போதைய பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்காக மேக்கேதாட்டில் செக் டேம் (Check Dam) கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.

அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோள்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகியோர் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கைவிட வேண்டும். மேலும், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட வேண்டும்.

பெங்களூரில் வாழும் தமிழர்கள்:

ஆசியாவிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பெங்களூரு மாநகரத்தில் 1.25 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அதில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் குடிநீர் தேவையையும் சேர்த்தே நாங்கள் பேசுகிறோம். எனவே, மனிதாபிமான அடிப்படையில் இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது .

எச்சரிக்கை:

தமிழக அரசு தனது பிடிவாதப் போக்கை நீட்டித்தால், வரும் நாள்களில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு சார்பில் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனக் கூறினார். இதனால் தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டன. போராட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்கு செல்கின்றன என்று மஞ்சுநாத் தேவ் தெரிவித்துள்ளார்.

Summary

Manjunath Dev stated on Sunday (July 26) that the Tamil Nadu government should not create obstacles regarding Karnataka's drinking water issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.