சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடியவர்களை, விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸாரை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பாராட்டினார்.
பிகார் மாநிலம் முசாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அவதேஷ்ராய் (31). இவர் கூட்டாளி அதே மாநிலத்தைச் சேர்ந்த முந்த்ராகுமார் (18). இவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி உடைமைகள் மற்றும் செல்லிடப்பேசிகளை திருடியதாக, பெரியமேடு போலீஸாரால் 3 -ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பெரியமேடு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், அங்கிருந்து அன்று இரவு தப்பியோடினர்.
இதுகுறித்து தகவலறிந்த அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, காவலர் கிருஷ்ணராஜ், முதல்நிலை பெண் காவலர் பி.வேதநாயகி ஆகியோர் அவதேஷ்ராயையும், முந்த்ராகுமாரையும் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இருவரும், மணலியில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைவரிசை காட்டியதும், நவம்பர் 7-ஆம் தேதி விமானத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில், காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய இரு குற்றவாளிகளையும் விரட்டிப் பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவலர் கிருஷ்ணராஜ், முதல்நிலை பெண் காவலர் வேதநாயகி ஆகியோரை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் திங்கள்கிழமை நேரில் அழைத்து, பாராட்டி வெகுமதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே. பாக்யராஜ் மறைவு பேரிழப்பு; இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய்

தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்! ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

ஆண்களின் உலகம்: பாக்யராஜின் மௌன கீதங்கள்... சென்சாரில் 4 பெண்கள்!






