எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசல் குறைந்தது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திங்கள்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் சொந்த ஊருக்கு ஏராளமான மக்கள் புறப்பட்டு சென்றனர். இருப்பினும்

Updated On :6 நவம்பர் 2018, 2:39 am IST


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திங்கள்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் சொந்த ஊருக்கு ஏராளமான மக்கள் புறப்பட்டு சென்றனர். இருப்பினும் மாலையில் புறப்பட்ட ரயில்களில் கூட்ட நெரிசல் குறைவாகக் காணப்பட்டது.
திங்கள்கிழமை காலை, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், கோவைக்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில், ஏராளமானோர் பயணம் செய்தனர். இவை தவிர, எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதிலும் அதிக அளவில் மக்கள் பயணம் செய்தனர். இந்நிலையில், பிற்பகலுக்கு பிறகு புறப்பட்ட ரயில்களில் வழக்கமான அளவில் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை காணப்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கடந்த 3 நாள்களாக அலைமோதிய கூட்டம் குறைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.