சென்னை மாநகர பேருந்தில் பயணி தவறவிட்ட ரூ.2.47 லட்சத்தை ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநரை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.
கோயம்பேடு -செங்குன்றம் இடையே இயக்கப்படும் பேருந்தில் நடத்துநர் சையது இஸ்மாயில், ஓட்டுநர் டில்லி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலைப் பணியில் இருந்தனர். இருவரும், அண்ணாநகர் பேருந்து பணிமனையில் நள்ளிரவில் பேருந்தை ஆய்வு செய்தபோது, அங்கு பயணி தவறவிட்ட ஒரு பை கிடப்பதும், அதில் ரூ.2.47 லட்சம் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள், உடனே அந்த பையை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையுடனும், கடமை உணர்வுடனும் காவல் நிலையத்தில் ஒப்படைத்த, ஓட்டுநர் டில்லி, நடத்துநர் சையது இஸ்மாயில் ஆகியோரை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, நினைவு பரிசு வழங்கி கெüரவித்தார். மேலும், வரும் 2019 -ஆம் ஆண்டு குடியரசு தின விழாவிலும் அவர்கள் கெüரவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார் இதேபோல், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதனும், அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டினார்.
காவலர்களுக்கு பாராட்டு: இதேபோல், பேருந்தில் பயணிகளிடம் செல்லிடப்பேசி திருடும் கும்பலை பிடித்த அண்ணா சாலை காவல் நிலைய தலைமைக் காவலர் த.பார்த்தசாரதி, காவலர் எம்.மகேஷ்வரன் ஆகியோரையும் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (15.08.2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு அனுகூலம்!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 15) - மீன ராசிக்கு எப்படி?

கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை: நண்பா் கைது

சுதந்திர தினம்: வேலூா் மாவட்டத்தில் 800 போலீஸாா் பாதுகாப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


