
காலணியில் மறைத்து கடத்தி வந்த ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி, தனது காலணியில் மறைத்து கடத்தி வந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி, தனது காலணியில் மறைத்து கடத்தி வந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த இஸ்ரப் (32) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி பயன்படுத்திய 8 மடிக்கணினிகளை கொண்டு வந்தது தெரிய வந்தது.
அதோடு அவர் வைத்திருந்த பொருள்களை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், இஸ்ரப் தனது காலணியில் மறைத்து வைத்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து, கடத்திக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தங்கக் கட்டிகளையும்,மடிக்கணினிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள், இஸ்ரப்பிடம் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





