இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

6-இல் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய அலுவலகம் திறப்பு: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு

சென்னை கலைவாணர் அரங்கில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய அலுவலக திறப்பு விழா, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:12 pm

சென்னை கலைவாணர் அரங்கில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய அலுவலக திறப்பு விழா, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது. இவ்விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
சென்னை அண்ணா நகர் ஜ்-4, 5-ஆவது பிரதான சாலையில் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா, கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை மாலை ல் நடைபெற உள்ளது.
இதில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி விருதும் வழங்க உள்ளார். இதில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.