கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காவலரிடம் வழிப்பறி

சென்னை மந்தைவெளியில் காவலரிடம் செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:11 pm


சென்னை மந்தைவெளியில் காவலரிடம் செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்தைவெளி சாலையார் தெருவைச் சேர்ந்தவர் சி.மணிமாறன் (25). இவர் சென்னை பெருநகர காவல் துறையில் ஆயுதப்படைக் காவலராக பணிபுரிகிறார். மணிமாறன், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு புறப்பட்டு, மந்தைவெளி பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், மணிமாறன் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.