தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், காளான் வளர்ப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை (பிப்.26)அண்ணாநகரில் நடைபெறவுள்ளது.
சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி
மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், காளான் வளர்ப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை (பிப்.26) நடைபெறவுள்ளது.
இதுதவிர, மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி வரும் புதன்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியானது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். ஒரு நாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.600.
இந்த பயிற்சி வகுப்பு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-2626 3484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.யு-30, 10 -ஆவது தெரு, (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), அண்ணாநகர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இந்தத் தகவல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத் தலைவர் அ.சதாசக்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


