ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

அடையாறு பகுதியில் வழிப்பறி: 5 பேர் கைது

சென்னை அடையாறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :24 ஜனவரி 2019, 3:29 am IST


சென்னை அடையாறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடையாறு பகுதியில் தனியாக நடந்து செல்கிறவர்களை குறி வைத்து ஒரு கும்பல் செல்லிடப்பேசி, பணப்பை ஆகியவற்றை பறித்து வந்தது. இக் கும்பல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீஸார் அடையாறு கஸ்தூரிபாய்நகரில் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு மொபெட்டில் வந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் அவர், துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (19) என்பதும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடையாறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அஜித்குமார் கொடுத்த தகவலின்பேரில் கண்ணகி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாமுவேல் (23), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த குமரவேல் (30), புதுப்பேட்டையைச் சேர்ந்த பாட்ஷா (18) உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 
இவர்களிடமிருந்து ஏராளமான திருட்டு செல்லிடப்பேசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.