ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

சென்னை தியாகராயநகரில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :24 ஜனவரி 2019, 3:29 am IST


சென்னை தியாகராயநகரில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மேலூர் புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் ஷாருக்கான் (19). இவர் மதுரையில் உள்ள மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூன்றாமாண்டு பட்டயப் படிப்பு படித்து வந்தார். 
இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக மதுரையில் படிக்கும் மாணவர்கள், சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தனர். அவர்கள் அனைவரும், மாம்பலம் கிரசன்ட் பார்க் தெருவில் உள்ள ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷாருக்கான் செல்லிடப்பேசியில் அந்த கட்டடத்தில் மூன்றாவது மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது திடீரென ஷாருக்கான் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்தக் காயமடைந்த அவர், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.