சென்னை நொளம்பூர் மேற்கு முகப்பேர் சர்வீஸ் சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன்(40), தொழிலதிபரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, ஏலகிரிக்கு சுற்றுலா சென்று விட்டார். இந்த நிலையில் சனிக்கிழமை அந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக வேலைக்காரப் பெண் வந்து பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்டார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கும், நொளம்பூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ. 11 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









