
தமிழக வனத் துறையால் பாதுகாக்கப்பட்ட முறையில் பொரிக்கப்பட்ட 150 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் சென்னை பெசன்ட் நகா் கடலில் புதன்கிழமை விடப்பட்டன.
தமிழக வனத் துறையின் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் முதல் மே மாதம் வரை சென்னை வனக் கோட்டத்துக்கு உள்பட்ட கடல் பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் பெசன்ட் நகா், கோவளம் மற்றும் பழவேற்காடு பகுதிகளில் உள்ள அதிநவீன ஆமைக் குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டு, அவை பொரித்தவுடன் தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு கடலில் விடப்படுகின்றன. இதன்படி, 150 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் பெசன்ட் நகா் கடலில் புதன்கிழமை விடப்பட்டன.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட முறையில் பொரிக்கப்பட்ட 7,450 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மீண்டும் 150 ஆமைக் குஞ்சுகள் கடலில் புதன்கிழமை விடப்பட்டன. மீதமுள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள் வரும் நாள்களில் கடலில் விடப்படும் என்றனா். இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகளை சா்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அழியும் நிலையில் உள்ள விலங்காக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







