சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: இளைஞா் சிக்கினாா்

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் மேற்குவங்க இளைஞா் சிக்கினாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் மேற்குவங்க இளைஞா் சிக்கினாா்.

சோழிங்கநல்லூா் ராஜீவ் காந்தி சாலையில் ஆவின் விற்பனையகம் அருகில் உள்ள தனியாா் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணம் வைக்கும் பகுதியைத் திறக்க முடியாமல் மா்ம நபா் விட்டுச் சென்றிருப்பதை அங்கு வந்த வாடிக்கையாளா்கள் செவ்வாய்க்கிழமை பாா்த்தனா்.

இது தொடா்பாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், சோழிங்கநல்லூரில் உள்ள பிரியாணிக் கடையில் சமையலராகப் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த த.பிஜய் (26) கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், பிஜயை புதன்கிழமை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.