
திருநங்கையாக மாறிய அனயா பங்கர் ஆஸி. மகளிர் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி!
திருநங்கையாக மாறிய அனயா பங்கர், மகளிர் கிரிக்கெட்டில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதைப் பற்றி...

அனயா பங்கர்.
திருநங்கையாக மாறிய அனயா பங்கர், மகளிர் கிரிக்கெட்டில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ஆர்யன் பங்கர், உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வந்தார். இவர், மும்பை 16 வயதுக்குள்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், 19 வயதுக்குள்பட்டோர் போட்டிகளில் புதுச்சேரி அணிக்காகவும், 23 வயதுக்குள்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு திருநங்கையாக மாறப்போவதாக அறிவித்து அதிர்ச்சியளித்த அவர், ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாய்லாந்தில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மூலமாக தான் முற்றிலும் பெண்ணாக மாற்றிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இடக்கை பேட்டரான அனயா பங்கர், அவ்வப்போது தனது கிரிக்கெட் விளையாடும் விடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மும்பை வீரர்கள் சர்ப்ராஸ் கான், முஷீர்கான் உள்ளிட்டோருடன் விளையாடியுள்ள அனயா பங்கர் (ஆர்யன்) மகளிர் போட்டிகளாக பிக்-பாஷ் தொடரில் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்காக அவருக்கு டெஸ்டோஸ்டிரோன் சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தகவல்களின் படி, திருநங்கையாக மாறிய வீரர் கிரிக்கெட் விளையாடத் தகுதிபெற, டெஸ்டோஸ்டிரோன் அளவு, 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் (நானோமோல்கள்/லிட்டர்) குறைவாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த அளவிற்கு மேலிருந்தால், கடந்த 2023-ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவின்படி, மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் தடைவிதிக்கப்படும்.
அனயா பங்கருக்கு நடத்தப்பட்ட சோதனையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இருப்பதால் அவருக்கு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்தாண்டு (2027) மார்ச்சில் நடைபெறும் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Former Mumbai Under-19 cricketer Anaya Bangar received a fillip on Tuesday, with Cricket Australia confirming her eligibility to play elite women's cricket from March 2027.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






