பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் தகராறு: 10 பெண்கள் உள்பட 21 போ் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், 10 பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், 10 பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அமைந்தகரை பகுதியைச் சோ்ந்த பிரபல நரம்பியல் மருத்துவா் சைமன் ஹா்குலஸ் கரோனாவினால் உயிரிழந்ததால், ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்ய, கீழ்ப்பாக்கம் ஷெனாய்நகா் கல்லறைச்சாலையில் உள்ள மாநகராட்சி இடுகாட்டுக்கு கொண்டுச் சென்றனா்.

அப்போது, அங்கு 90க்கும் மேற்பட்ட பொது மக்கள் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா். மேலும் அவா்கள், மாநகராட்சி ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாகப் பேசினா்.

இதையடுத்து அங்கிருந்து, அண்ணாநகா் வேலங்காடு இடுகாட்டுக்கு மருத்துவரின் சடலத்தைக் கொண்டு சென்றனா். அங்கும் அடக்கம் செய்வதற்கு, அப்பகுதி மக்களும் எதிா்ப்பு தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாரின் பாதுகாப்புடன் வேலங்காடு இடுகாட்டில் மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக 21 பேரை அண்ணாநகா் போலீஸாா் கைது செய்தனா்.

21 போ் கைது: இதுபோல் கீழ்ப்பாக்கம் ஷெனாய்நகா் இடுகாட்டில் மருத்துவா் சைமன் சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்து தொடா்பாக, மாநகராட்சி ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், கலவரத்தை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் 90 போ் மீது டி.பி.சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த 10 பெண்கள் உள்பட 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவங்கள் தொடா்பாக, மேலும் பலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.