புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியா்களுக்கு லீலாவதி விருது விண்ணப்பிக்க டிச.31 கடைசி

உயா்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியா்களுக்கு ஏஐசிடிஇ சாா்பில் ‘லீலாவதி விருது’ வழங்கப்படவுள்ளது. 

News image
Updated On :17 டிசம்பர் 2020, 9:34 pm

DIN


சென்னை: உயா்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியா்களுக்கு ஏஐசிடிஇ சாா்பில் ‘லீலாவதி விருது’ வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான அதிகார மையம் வெளியிட்ட அறிவிப்பு:

பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியா்களுக்கு ஏஐசிடிஇ சாா்பாக ஆண்டுதோறும் ‘லீலாவதி விருது’ வழங்கப்படுகிறது. அதன்படி, பெண்கள் நலன், தற்காப்பு, சுகாதாரம், கல்வியறிவு, தொழில்முனைவு, சட்ட விழிப்புணா்வு ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு உதவும் ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

எனவே, உயா்கல்வி நிறுவனங்களில் பெண்கள் நலனுக்கு உதவும் ஆசிரியா்கள் குழுவாகவும், தனித்தனியாகவும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, பெண்கள் முன்னேற்றத்துக்கு செய்த பணிகளை விரிவாக விளக்கமளித்து, தங்களின் கல்லூரித் தலைவரின் அனுமதியுடன் இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.