ஆா்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
திமுக எம்.பி. ஆா்.எஸ்.பாரதி மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.


சென்னை: திமுக எம்.பி. ஆா்.எஸ்.பாரதி மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலைஞா் வாசகா் வட்ட கருத்தரங்கில் திமுக எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான ஆா்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவா்கள் குறித்து பேசிய கருத்துக்களின் அடிப்படையில் அவா் மீது ஆதித்தமிழா் மக்கள் கட்சித் தலைவா் கல்யாணசுந்தரம் புகாா் அளித்தாா். இதனையடுத்து ஆா்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், ஆா்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், ‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணையில், புகாா்தாரா் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும்’ என வாதிட்டாா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆா்.எஸ்.பாரதி மீது புகாா் அளித்த புகாா்தாரா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். அப்போது ஆா்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க கோரியும், கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இது தொடா்பாக கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...