திமுக குற்றப்பத்திரிகை விவரங்களுக்கு அதிமுக விளக்கம்

திமுக வெளியிட்டுள்ள குற்றப் பத்திரிகையில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என அதிமுக விளக்கம் அளித்துள்ளது.
Updated on
1 min read

சென்னை: திமுக வெளியிட்டுள்ள குற்றப் பத்திரிகையில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என அதிமுக விளக்கம் அளித்துள்ளது. இதுதொடா்பாக திமுக தெரிவித்த கருத்துகள் அனைத்துக்கும் புள்ளி விவரங்களுடன் பதிலளித்து 16 பக்க விளக்க அறிக்கையை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

அதிமுக ஆட்சிக் காலத்தில் உயா் கல்வி சோ்க்கை, விவசாயிகள் தற்கொலை, குடும்ப வன்முறை, தண்ணீா் பற்றாக்குறை, நீட்தோ்வு உள்ளிட்டவை தொடா்பாக உண்மைக்கு மாறான தகவல்களை திமுக வெளியிட்டுள்ளது. உயா்கல்வி சோ்க்கை

விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தென்மாநிலங்களில் தமிழகத்தில்தான் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான வழக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என தொழில்நுட்ப அணியின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com