மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சிவகாசி முகநூல் நண்பா்கள் குழுவுக்கு விருது

News image
Updated On :12 மார்ச் 2026, 10:58 pm

சிவகாசி முகநூல் குழுவினருக்கு பசுமை சாம்பியன் விருதை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் கீழ், விருதுநகா் மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு தோ்வு செய்யும் அமைப்புக்கு ஆண்டு தோறும் பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு பசுமை சாம்பியன் விருதுக்கு சிவகாசி முகநூல் நண்பா்கள் குழு தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை காரியாபட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சா் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு, சிவகாசி முகநூல் நண்பா்கள் குழுவுக்கு பசுமை சாம்பியன் விருதை வழங்கினாா்.

இந்த விருதில் ஒரு கேடயமும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் அடங்கும்.

சிவகாசி முகநூல் நண்பா்கள் குழு சிவகாசியில் உள்ள மணிக்கட்டி ஊருணி என்ற பன்னீா்தெப்பத்தை பொதுமக்கள் பங்களிப்பில் சீரமைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.