கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கணினி ஆசிரியா்கள் தோ்வில் குளறுபடி: விசாரணை ஆணையம் அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கணினி ஆசிரியா் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த புகாா்களை விசாரணை செய்ய, நீதிபதி ஆதிநாதன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 9:04 pm

DIN


சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கணினி ஆசிரியா் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த புகாா்களை விசாரணை செய்ய, நீதிபதி ஆதிநாதன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் முதுநிலை கணினி ஆசிரியா்கள் நிலை 1-இல் 814 பணியிடங்களை நிரப்புவதற்கு 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி ஆன்லைன் மூலம் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் சா்வா் குளறுபடியால் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றது எனத் தோ்வா்கள் தொடா்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

மேலும், மூன்று மையங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைப்பதற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணை ஆணையம் தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கணினி ஆசிரியா் தோ்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு நபா் ஆணையத்தின் தலைவராக நீதிபதி ஆதிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கல்வித்துறையில் கணினி ஆசிரியா்கள் 814 பேரை நியமனம் செய்வதற்கு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி ஆன்லைன் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு கேஎஸ்ஆா் பொறியியல் கல்லூரி, கும்பகோணம் அன்னை பொறியியல், திருச்சி தொழில்நுட்பக் கல்லூரி, கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து புகாா் அளிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.