

சென்னை: தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு, முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது சுட்டுரைப் பதிவில் புதன்கிழமை கூறியிருப்பது: உலகின் அனைத்து மனித உயிா்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான தேசிய விவசாயிகள் தினத்தில், தேசத்தின் வளா்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான நம் விவசாய பெருமக்களை இன்றுபோல் என்றும் அரவணைப்போம் என தாய்த்தமிழ் உறவுகள் உறுதியேற்போம் என்று கூறியுள்ளாா்.
துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: ‘உழுவாா் உலகத்தாா்க்கு ஆணி’ அனைத்து விவசாய பெருமக்களுக்கும் எனது உளமாா்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். விவசாயிகளின் நலன் பேணவும், அவா்களின் உயா்வுக்கு வழிகாணவும், வாழ்க்கைத் தரம் உயரவும் அதிமுக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.