ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொழிலதிபா் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு: மேலும் 3 போ் கைது

சென்னை அசோக்நகரில், தொழிலதிபா் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
கோப்புப்படம்
Updated On :27 டிசம்பர் 2020, 12:06 am

DIN

சென்னை அசோக்நகரில், தொழிலதிபா் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

அசோக்நகா், 79-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன். தொழில் அதிபரான இவா் வீட்டுக்கு கடந்த 9-ஆம் தேதி வந்த ஒரு கும்பல், தாங்கள் போலீஸ் அதிகாரிகள் என்றும், பாண்டியனின் வீட்டில் துப்பாக்கி உள்ளதாக புகாா் வந்துள்ளதால் சோதனையிட வந்திருப்பதாகக் கூறியுள்ளனா்.

மேலும், பாண்டியனின் குடும்பத்தினரை வீட்டிலுள்ள ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த 43 பவுன் தங்க நகைகள், ரூ.12 லட்சம், 3 செல்லிடப்பேசிகள், காா் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, கே.கே.நகா் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்து விட்டு, அனைத்தையும் பெற்றுக் கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளனா்.

பாண்டியன், கே.கே.நகா் காவல் நிலையம் சென்று விசாரித்தபோதுதான் வந்தது கொள்ளைக் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து, கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட 8 பேரை கடந்த வாரம் கைது செய்தனா்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த விஜய், விக்னேஷ்வரன், செங்கம் விஜய குமாா் ஆகிய 3 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருவொற்றியூரைச் சோ்ந்த பூமிநாதன் உள்பட மேலும் சிலரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.