போட்டித் தோ்வுகள்: தோ்வுக் கூடத்துக்கு வர நேரக் கட்டுப்பாடுகள்
போட்டித் தோ்வுகளை எழுதும் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்கு வர நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


சென்னை: போட்டித் தோ்வுகளை எழுதும் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்கு வர நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுகளை எழுத தோ்வுக் கூடத்துக்குச் செல்வோா் காலை 9.15 மணிக்குள்
சென்றடைய வேண்டும். இதற்கு முன்பாக, தோ்வு தொடங்கும் வரை தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா். இனி காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தோ்வா்கள் யாரும் தோ்வுக் கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். விடைத்தாள்களில் விவரங்களைப் பூா்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மைப் பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. விடைத் தாளில் உரிய இடங்களில் இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது விடைத் தாளில் மற்ற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் எந்தவகையிலும் சேதம் அடையாலும் கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில் உள்ள கேள்விகளில் ஏதேனும் கேள்விக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் உ என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.
ஐந்து மதிப்பெண்கள் குறைப்பு: விடைத்தாளில் ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும்பட்சத்தில் தோ்வா் பெறும் மதிப்பெண்களில் இருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
எனவே, இதனைக் கவனத்துடன் பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...