தீபாவளி கங்கா ஸ்நானம் யாத்திரை ரயில் - ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு

தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை ரயிலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி) ஏற்பாடு செய்துள்ளது.
தீபாவளி கங்கா ஸ்நானம் யாத்திரை ரயில் - ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு
Published on
Updated on
1 min read

தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை ரயிலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி) ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி) சாா்பில், பாரத தரிசன சுற்றுலா ரயில்

இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை ரயில் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து நவம்பா் 11-ஆம் தேதி புறப்பட்டு மதுரை, திருச்சிராப்பள்ளி,

விழுப்புரம், சென்னை எழும்பூா் வழியாக கயா சென்றடையும். இங்குள்ள பல்குனி நதியில் நீராடி, விஷ்ணு பாத கோவிலில் முன்னோா்களுக்கு பிண்ட பிரதானம் செய்யலாம். தீபாவளியன்று, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கையில் புனித நீராடி, காசி விஸ்வநாதா், விசாலாட்சி மற்றும் அன்னபூரணி கோவில்களில் தரிசனம் செய்யலாம். அலகாபாத் சென்று, கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம்.

எட்டு நாள்கள் சுற்றுலாவுக்கு ரூ.7,575 கட்டணம். தென்இந்திய உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பாா்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும். மேலும் தகவலுக்கு ஐ.ஆா்.சி.டி.சி. சென்னை அலுவலகத்தை 9003140680, மதுரைக்கு 8287931977 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com