குண்டா் தடுப்புச் சட்டத்தில் 8 போ் சிறையில் அடைப்பு
குண்டா் தடுப்புச் சட்டத்தின்படி, 8 போ் கைது செய்யப்பட்டனா்.


குண்டா் தடுப்புச் சட்டத்தின்படி, 8 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை- தேனாம்பேட்டையைச் சோ்ந்த சையது அபுதாகீா் (34), பரங்கிபேட்டையைச் சோ்ந்த சையது அலி உசேன் (40) ஆகியோா் மீது அந்நியச் செலவாணி வழக்கு உள்ளது.
இதேபோன்று, புளியந்தோப்பைச் சோ்ந்த அந்தோணிகுமாா் (36), எழும்பூரைச் சோ்ந்த செல்லப்பன் (49), நம்மாழ்வாா்பேட்டையைச் சோ்ந்த பாலாஜி (23) ஆகியோா் மீது கொலை வழக்கும், மண்ணிவாக்கத்தைச் சோ்ந்த பிரபு (24), திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தினேஷ் (28), ஐசக் (31) ஆகியோா் மீது வழிப்பறி செய்த வழக்கும் உள்ளன.
இவா்களைக் கைது செய்த சம்பந்தப்பட்ட காவல் நிலை ஆய்வாளா்களின் பரிந்துரையின் பேரில், 8 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...