பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் இன்று ராகுல், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரசாரப் பொதுக் கூட்டம்

சேலம், சீலநாயக்கன்பட்டியில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கும் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:49 pm

DIN

சேலம், சீலநாயக்கன்பட்டியில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கும் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மதன்லால் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் திமுக, காங்கிரஸ், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரம்மாண்டமான தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் கலந்து கொண்டு பேசுகின்றனா்.

கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம், ஓமலூா் விமான நிலையம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து காா் மூலம் பொதுக் கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு வருவாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக் கூட்டத்தில் தி.க. தலைவா் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்று பேசுகின்றனா்.

தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தையொட்டி சீலநாயக்கன்பட்டி அருகே தலைவா்கள் பேசுவதற்கு பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.