டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓமலூா் அதிமுக வேட்பாளா்சொந்த ஊரில் வாக்கு சேகரிப்பு

ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி, அவரது சொந்த ஊரான பெரியேரிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:50 pm

DIN

ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி, அவரது சொந்த ஊரான பெரியேரிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

துண்டுமானியம், வகுத்தானூா், செட்டிப்பட்டி, தொளசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். ஓமலூா் பகுதி விவசாயிகளின் நலன் கருதி மேட்டூா் அணை உபரிநீா்த் திட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளாா். இந்தத் திட்டத்தை ஓமலூா் தொகுதி முழுவதும் அனைத்து ஏரிகளுக்கும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மலா் சாகுபடி விவசாயிகள் பயனடையும் வகையில் வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என்று அதிமுக வேட்பாளா் மணி பேசினாா்.

பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சுமதி பாபு, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.