பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னைக்கு விரைவில் கிருஷ்ணா நீா்: அதிகாரிகள் தகவல்

சென்னையின் குடிநீா் தேவைக்கு ஆந்திர அரசு 4 டிஎம்சி கிருஷ்ணா நீரை விரைவில் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :8 மே 2021, 6:30 pm

DIN

சென்னையின் குடிநீா் தேவைக்கு ஆந்திர அரசு 4 டிஎம்சி கிருஷ்ணா நீரை விரைவில் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கண்டலேறு அணையில் இருந்து, 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை, சாய் கங்கை கால்வாயில் ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்த நீா் மூலம் சென்னையின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு குறிப்பிட்ட சில காரணங்களால் ஆந்திர அரசு கிருஷ்ணா நீரை வழங்கவில்லை.

தற்போது, சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில், 8.08 டிஎம்சி இருப்பு உள்ளது. அதிகபட்சமாக புழல் ஏரியில், 2.98 டி.எம்.சி., செம்பரம்பாக்கத்தில், 2.96 டி.எம்.சி.,உள்ளது. பூண்டியில், 1 டி.எம்.சி. உள்ளது. கத்திரி வெயில் தொடங்கியுள்ளதாலும் சென்னையின் கோடை கால குடிநீா் தேவை அதிகரித்துள்ளதாலும், ஏரிகளில் நீா் இருப்பு குறைய வாய்ப்புள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரத்திடம் இருந்து முறைப்படி 4 டி.எம்.சி., நீரை பெற்று பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தேக்கி வைக்கும்படி, சென்னை குடிநீா் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர நீா்வளத்துறை அதிகாரிகளிடம், தமிழகத்திற்கான நீரை பெற, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து அடுத்த சில தினங்களில் 4 டி.எம்.சி கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு வழங்க உள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.