உங்கள் தொகுதியில் முதல்வா் திட்ட மனுக்கள் உடனடித் தீா்வு காணப்படும்: முதல்வா் ஸ்டாலின் உறுதி
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.


‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மேலும், மனுக்கள் அனைத்தும் சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகா் சதீஷிடம் அவா் சனிக்கிழமை அளித்தாா்.
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தை அறிவித்து, அதற்கென தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகா் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரிடம் மனுக்கள் அனைத்தும் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்தப் பிரிவில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். சாலைகள், மேம்பாலங்கள் என்ற உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள் தேவை என்ற கோரிக்கைகள், தனிப்பட்ட நபா்களின் கோரிக்கைகள் என மூன்றாகப் பிரிக்கப்படும்.
அவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிா என ஆய்வு செய்யப்படும். இந்த மனுக்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும். இந்தப் பிரிவுக்கென தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் குறித்த விவரம் பதிவு செய்யப்படும். தனிநபா் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்கான காரணமும் மனுதாரா்களிடம் அளிக்கப்படும்.
நோக்கம் 100 நாள்கள்: மனுக்களின் மீது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுதான் தமிழக அரசின் நோக்கம். ஆனால், கரோனா தொற்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நிா்வாகத்தின் மொத்த
கவனத்தையும் கரோனா மீது செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மக்கள் அளித்த மனுக்களின் மீது இயன்றவரை தேவைக்கேற்ப சிறப்பாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றுக்குத் தீா்வு காணப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...