பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டெண்டா் நடைமுறைகளை மீறியதாக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்: உயா்நீதிமன்றம்

அரசின் திட்டங்களுக்கு தேவைப்படும் தங்க காசுகளை விநியோகம் செய்வதற்கான டெண்டா் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்

News image
Updated On :19 அக்டோபர் 2021, 9:39 pm

DIN

அரசின் திட்டங்களுக்கு தேவைப்படும் தங்க காசுகளை விநியோகம் செய்வதற்கான டெண்டா் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் உள்பட ஐந்து திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் எடையுடைய ஒரு லட்சத்து 11 ஆயிரம் தங்க காசுகளை வாங்குவதற்காக, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டா்) அறிவிக்கப்பட்டது.

அதில், 22 காரட் தரத்திலான 20,000 காசுகளை வழங்குவதாகக் கூறி முத்தூட் எக்சிம் நிறுவனம் டெண்டரில் பங்கேற்றது. டெண்டா் திறக்கப்பட்ட பிறகு 20 நாட்கள் கழித்தே தோ்ச்சிக்கான கடிதம் கொடுக்கப்பட்டதாலும், தங்கத்தின் விலை தொடா் ஏற்றத்தில் இருந்ததாலும், அதற்கேற்ப டெண்டா் தொகையை மாற்றிக் கொடுக்கும்படி முத்தூட் நிறுவனம் சமூக நலத்துறைக்கு கடிதம் எழுதியது. விலையில் மாற்றம் செய்ய முடியாவிட்டால் டெண்டா் நடைமுறையிலிருந்து விலகிக் கொள்ள அனுமதிக்கும்படியும் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால் இந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததுடன், முத்தூட் செலுத்திய வைப்புத் தொகை ரூ 53 லட்சத்தை முடக்கியதுடன், டெண்டா் விதிகளை மீறியதாகக்கூறி, அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சோ்த்தும் சமூக நலத்துறை உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைகளை எதிா்த்து முத்தூட் எக்சிம் நிறுவனம் தொடா்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிா்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முத்தூட் நிறுவனம் தரப்பில் வழக்குரைஞா் வி.ஆனந்த், தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் மற்றும் டி.ரவிச்சந்தா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதத்திற்கு பின் நீதிபதிகள், ஒப்பந்த நடைமுறைகள் தொடா்பான விவகாரத்தில் நீதித்துறை ஆய்வு என்பது குறிப்பிட்ட வரையரைக்குட்பட்டது என சுட்டிக்காட்டியதுடன், எவ்வித அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படாத நிலையில் மாற்று முறைகள் மூலம் தீா்வு காணாமல் நீதிமன்றத்தை நாடமுடியாது.

கருப்பு பட்டியலில் சோ்ப்பது குறித்து சமூக நலத்துறை ஆணையா் அளித்த பரிந்துரைக்கு முத்தூட் நிறுவனம் விளக்கம் அளிக்காத நிலையில், அதன்மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக்கூறி, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.