சேத்துப்பட்டில் அம்பேத்கர் சமூக நலச்சங்க தலைவர் வெட்டிக்கொலை: இருவரிடம் விசாரணை
அம்பேத்கர் சமூக நலச்சங்க தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை: சென்னை சேத்துப்பட்டில் திங்கள்கிழமை இரவு அம்பேத்கர் சமூக நலச்சங்க தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, சென்னை சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் ( 50 ). இவர் அம்பேத்கர் சமூக நலச்சங்க தலைவராகவும், கார் ஓட்டுநராகவும் வேலை செய்து வந்துள்ளார். இளங்கோவனுக்கு சீதா (45) என்ற மனைவியும் மகள் ப்ரீத்தி ( 24 ) மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. இடிந்து விழுந்த கமலாலய சுற்றுச்சுவர்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
திங்கள்கிழமை இரவு 8.15 மணியளவில் சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெரு மலையாள கிளப் சாலை சந்திப்பு அருகே இளங்கோவன் தனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 எதிரிகள் கையில் வைத்திருந்த கத்தியால் இளங்கோவனை வெட்டினர். இதில் இளங்கோவன் பலத்த காயமடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
காயமடைந்த இளங்கோவனை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.
இளங்கோவன் கொலை தொடர்பாக சேத்துப்பட்டு மங்கலாபுரம் 9வது தெருவைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 147,148,341, 342, 324,325,307, 302 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, விசாரண செய்து வருகின்றனர்.
விசாரணயில், இறந்து போன இளங்கோவன் என்பவருக்கும் அதேப் பகுதியிலிருந்து மாறி மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் சஞ்சய் பிரபு (திமுக இளைஞரணி உறுப்பினர்) ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 20.09.2021 ம் தேதி இரவு 8.30 மணியளவில் சஞ்சய் பிரபு மேலும் சிலருடன் சேர்ந்து மேற்படி சம்பவ இடத்தில் உள்ள பங்க் டீ கடையில், இளங்கோவன் இல்லாததால் டீ கடையில் வேலை செய்யும் நபர்களை மிரட்டி கடையில் இருந்த பாட்டில்களை உடைத்து சென்றனராம்
இந்த சம்பவம் தொடர்பாக இளங்கோவன் அளித்திருந்த புகாருக்கு சேத்துப்பட்டு காவலர்கள் விசாரணை செய்து வந்துள்ளனர். மேலும், இளங்கோவன் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் எதிரி திமுக இளைஞரணி உறுப்பினர் சஞ்சய் பிரபுவின் அண்ணன் சேத்துப்பட்டு 21 வது தெருவைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (51), சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் 4-வது தெருவைச் சேர்ந்த வெல்டிங்கடை நடத்தி வரும் குமரவேல் (39) ஆகிய இரண்டு நபர்களை சேத்துப்பட்டு நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...