பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராயப்பேட்டை: அம்மிக் கல்லால் மனைவியை தாக்கி கொன்றவர் கைது 

சென்னை, ராயப்பேட்டை பகுதியில் மனைவியிடம் தகராறு செய்து, அம்மி அரைக்கும் குழவி கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

News image
ராயப்பேட்டை: அம்மிக் கல்லால் மனைவியை தாக்கி கொன்றவர் கைது
Updated On :17 செப்டம்பர் 2021, 10:45 am

DIN

சென்னை, ராயப்பேட்டை பகுதியில் மனைவியிடம் தகராறு செய்து, அம்மி அரைக்கும் குழவி கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.சென்னை, ராயப்பேட்டை பகுதியில் மனைவியிடம் தகராறு செய்து, அம்மி அரைக்கும் குழவி கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

சென்னை, இராயப்பேட்டையில் வசிக்கும் கனிமொழியின் கணவர் சுப்பிரமணி. இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்து, தற்போது 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கனிமொழிக்கும், கணவர் சுப்பிரமணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், இன்று (17.09.2021) அதிகாலை சுமார் 01.15 மணிக்கு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது வாய் தகராறு முற்றி ஆத்திரத்தில் சுப்பிரமணி அருகிலிருந்த அம்மி அரைக்கும் குழவிக்கல்லை எடுத்து கனிமொழி தலையில் போட்டு, கொலை செய்து தப்பிச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்த சகோதரர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்ததின்பேரில், ஆம்புலன்ஸ் குழுவினர் பரிசோதனை செய்ததில், கனிமொழி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, கனிமொழியின் சகோதரர் கந்தவேல், காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து, கனிமொழியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற அவரது கணவர் சுப்பிரமணி, இன்று காலை கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் சுப்பிரமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.