ரயில் சேவையில் மாற்றம் இல்லை: பொறியியல் பணிகள் ரத்து
சென்னையில் பொறியியல் பணிகள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்கள் வழக்கமான நேரங்களில் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னையில் பொறியியல் பணிகள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்கள் வழக்கமான நேரங்களில் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே கடந்த வாரம் அறிவித்தது. சென்னை - மங்களூரு அதிவிரைவு சிறப்பு ரயில் செப்டம்பர் 28-ம் தேதி சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கேஎஸ்ஆர் பெங்களூரு- கன்னியாகுமரி இடையிலான சிறப்பு விரைவு ரயில் செப்டம்பர் 23, 25 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பெங்களூருவிலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுவும் தற்போது வழக்கமான நேரப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பேசின் பிரிட்ஜ் பகுதியில் பொறியியல் பணிகள் காரணமாக தன்பாத் - ஆலப்புழா சிறப்பு ரயில் செப்டம்பர் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்குப் பதில் மாற்றுப் பாதையாக பெரம்பூரில் கூடுதலாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...